கோவை ஒண்டிப்புதூரில் மனைவி, மகள்களை கொன்ற குடிகார தந்தை கைது

கோவை ஒண்டிப்புதூரில் குடிப்பழக்கத்தால் வேலையை இழந்த தந்தை, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரு மகள்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் குடும்பத் தலைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராஜ் (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்தார். இதனால் அவரது மனைவி புஷ்பா (35) உடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், ஜூலை 8 ஆம் தேதி காலை, தங்கராஜ் தனது மனைவி மற்றும் இரு மகள்களான ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகியோர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தங்கராஜ் கோபத்தில் முதலில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளியதும், அவளை காப்பாற்ற முயன்ற மனைவி புஷ்பாவையும், பின்னர் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் தள்ளி, அதன் மூடியை மூடி கொலை செய்த உண்மை வெளிப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தங்கராஜை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...