உடுமலை அருகே சாலை அமைப்பதில் முறைகேடு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு. கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவைச் சேர்ந்த போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் முறைகேடாக அருகில் உள்ள தனியார் மனைப்பிரிவுக்கு நிதியை ஒதுக்கி சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அளித்தனர். தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட அதிகாரிகள் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை அமைப்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பொதுமக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு வருடமாக சாலை அமைப்பதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...