சூலூரில் 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது

கோவை மாவட்டம் சூலூரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 1.5 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பநாயக்கன்பட்டி - கலங்கல் சாலையில் உள்ள கலங்கல் சந்திப்பு அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது, ஒரு நான்கு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பாபு (34) மற்றும் பாரதி (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள ஒரு குடோனில் மேலும் 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தென்னரசு (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு 12 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல், சிந்தாமணிபுதூர் சந்திப்பு அருகே உள்ள மற்றொரு குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 99 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குடோனில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பாலமுருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...