கோவையில் காவல் உதவி ஆய்வாளர் என கூறி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

கோவை பேரூரில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து பெட்டிக்கடையில் ரூ.15,000 பறித்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமான நபர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை பேரூர் படித்துறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பண பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி தன்னை பேரூர் உதவி ஆய்வாளர் என கூறி, பெட்டிக்கடை உரிமையாளர் வெற்றிவேலிடம் இருந்து ரூ.15,000 பறித்துக் கொண்டதோடு, அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உக்கடம் காவல் நிலையம் பின்புறம் கொண்டு சென்று விட்டு விட்டு தப்பியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வெற்றிவேல் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பேரூர் அருகே வசித்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், பெருமாள் 1997 பேஜை சேர்ந்த முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட பெருமாள் பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவில் துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பெருமாளிடம் காவல்துறையினர் ஜூலை 10 அன்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...