ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும்: பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோயிலின் ராஜகோபுரம் முன் பகுதியில் பாலாலய பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா தமிழக முதலமைச்சரால் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. வரும் தை மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைவாணி சாந்தலிங்கம், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...