பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் 26 கட்டிடங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 66 கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...