கோவை ராஜவீதியில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை மர்ம நபர் திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர் வி நகைக்கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக்கடைகள் நடத்தி வருகிறார். நேற்று காலை, ராஜவீதியில் உள்ள கடைக்கு வந்த மர்ம நபர் பத்து சவரன் சங்கிலி கேட்டுள்ளார். டிசைன்களைப் பார்த்த அந்த நபர் திடீரென ஒரு தங்க சங்கிலியை கீழே போட்டு, அனைவரும் இருந்ததால் அதை எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் டிசைன் சரியில்லை என்று கூறி மற்ற கடைகளுக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை, நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்றபின், அதே நபர் மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில், காலையில் பார்த்த அதே தங்க சங்கிலி வேண்டும் எனவும், மற்ற கடைகளில் அது போன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை நகையை எடுப்பதற்கு நகர்ந்த கணத்தில், கடையில் வைத்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, நகை வேண்டாம் என்று கூறி அந்த நபர் தப்பியோடிவிட்டார். சந்தேகம் அடைந்த விஷ்ணுவின் தந்தை நகைகளைச் சரிபார்த்தபோது, 83 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் தந்தை உடனடியாக தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.



கடைக்கு வந்த விஷ்ணு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடையில் முதியவரின் கவனத்தை திசைதிருப்பி 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பல்வேறு கடைகளில் திருட முயன்ற அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அதன் காரணமாக மாஸ்க் அணிந்திருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...