அன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

கோவை அன்னூர் அருகே பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோவை அன்னூர் அருகே உள்ள பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பொன்னேகவுன்டன் புதூரில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் ஜூலை 17ஆம் தேதி காலை மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ​​ஒரு மறைவான புதருக்குள் மயில் ஒன்று முட்டையிட்டு அடைகாத்து வந்தது. அதனை ஒரு சிறுத்தை வேட்டையாட முயன்றதை கண்டு மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அச்சமடைந்த ஊழியர்கள் சத்தம் எழுப்பியதும், சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர், நடந்த சம்பவத்தை தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்தனர். தோட்ட உரிமையாளர் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்களை பொறுத்தியுள்ளனர். பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ள வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...