வால்பாறையில் கனமழை: சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு

வால்பாறையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான கருமலை, அக்காமலை, பச்சைமலை, வெள்ளமலை, சின்னகல்லார், நீறார் அணை, சின்கோனா, பெரியகல்லார், சோலையார் அணை, சேக்கல் முடி, புதுக்காடு மழுக்கபாறை ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையின் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நடுமலையாறு மற்றும் கூலாங்கள் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வால்பாறை நகராட்சி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பதிவான மழை அளவு மற்றும் சோலையாறு அணையின் நிலவரம் பின்வருமாறு:

- வால்பாறை: 69 மி.மீ

- நீரார் அணை: 74 மி.மீ

- சின்னகல்லார்: 105 மி.மீ (அதிகபட்சமாக 10 செ.மீ)

- சோலையாறு அணை: 62 மி.மீ

சோலையாறு அணைக்கு தற்போதைய நீர் வரத்து 7,753 கன அடியாக உள்ளது. அணையில் தற்போது 4 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த உயரம் 165 அடி என்ற நிலையில், தற்போது 140 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. ஒரே நாளில் 12 அடி உயரம் தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை முழு கொள்ளளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...