தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கயல்விழி, பொல்லானின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரர் பொல்லான். பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை மாறுவேடத்தில் தீரன் சின்னமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 1801 காவிரி கரைப்போர், 1802 அரச்சாலையூர் போர், 1804 ஓடாநிலை போர்களில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான் முக்கிய பங்கு வகித்தார்" என்று அவர் குறிப்பிட்டார்.



அமைச்சர் மேலும் தொடர்ந்து, "பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆடி 1ம் தேதி அரச்சலூரை அடுத்த நல்லமங்காபாளையத்தில் பொல்லானைத் தலைகீழாகக் கட்டிக் கொன்றனர். அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் இன்று நடைபெறும் பொல்லானின் 219வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் தமிழ் புலி கட்சியினர் செய்திருந்தனர். மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், திமுக மகளிர் அணி அமுதா, ஆரோன் செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை உறுப்பினர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...