சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு: சிகிச்சை பலனின்றி மற்றொருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மற்றொருவர் உயிரிழந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த அழகர்ராஜா (24), முத்துக்குமார் (23), கருப்புசாமி (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நான்கு பேரில், தினேஷ்குமார் (23), மனோஜ் (24), பாண்டீஸ்வரன் (27) மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வீரமணி (21) ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி ஜூலை 16 அன்று உயிரிழந்தார். இதன் மூலம் சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சோகமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...