கோவையில் நடமாடும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

கோவை நகரின் பல பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மத்திய நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. உக்கடம், கோட்டைமேடு, பெரிய கடை வீதி, ரத்தினபுரி போன்ற பகுதிகளில் குரங்குகள் புகுந்து தொல்லை தருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 19 அன்று சிவானந்தா காலனியில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதிக்கு வந்த குரங்கு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகர் பகுதியிலும் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குரங்குகளின் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் வருவதற்கு முன்பே குரங்குகள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளின் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர வனத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...