திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளி திருவிளக்கு பூஜை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழிபட்டனர். சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் முன்னதாக, ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், வாழைப்பழம், அரிசி கொண்டு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்திடவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் குத்துவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...