கோவை பெரியகடை வீதியில் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

கோவை பெரியகடை வீதியில் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறியும், பொதுமக்களை வற்புறுத்தி பொருட்கள் வாங்க கடைக்குள் இழுத்து செல்லும் கடை ஊழியர்கள் குறித்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இத்தகைய செயல்களில் ஈடுபடும் கடை ஊழியர்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கடை வீதிகளில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

கோவை மாநகரின் முக்கிய வணிக மையமான பெரியகடை வீதியில் அதிகமான துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி கடைக்குள் அழைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் இப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் இளைஞர், அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்த சம்பவம் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த இளைஞரை தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்த இளைஞரும் அவரை தாக்கியுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யும் வகையில் அழைப்பதற்கு கூலி ஆட்களை நியமிப்பவர்கள் மீது (BNS ACT 292) பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இத்தகைய நபர்களை வேலைக்கு அமர்த்தும் கடை உரிமையாளர்கள் உடந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என B-1 கடைவீதி காவல் நிலையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க பின்வரும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்:



காவல் நிலையம் தொலைபேசி எண்: 94981 01141, 0422-230 2746

காவல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 94981 81213

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...