அரசியல் சுத்தம் பாஜகவில் இருந்து தொடங்க வேண்டும்: அண்ணாமலை

கோவை துடியலூரில் நடைபெற்ற தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அரசியல் சுத்தம், லஞ்ச ஒழிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் அமைப்பின் முப்பெரும் விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த நிகழ்வில் அமைப்பு சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அண்ணாமலை, ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் இல்லை எனவும், 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.



அரசியல் சுத்தம் என்பது பாஜகவில் இருந்து தொடங்க வேண்டும் என முழு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் அனைத்தும் ஹையர் கூட்ஸ் தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் வைக்கும் இலக்கு பெரிதாக இருக்க வேண்டும் என்றும், அதுதான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். லஞ்சம் கொடுப்பதை எதிர்க்க வேண்டும் என்றும், இளைஞர்கள் லஞ்சத்தை எதிர்க்கவில்லை என்றால் நாட்டில் லஞ்சம் எனும் பேயை விரட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.



மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் போன்றோரை உதாரணமாக குறிப்பிட்ட அண்ணாமலை, தனி மனிதனாக இருந்து எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்யலாம் என்பதை வலியுறுத்தினார். லஞ்சத்தை அறவே தவிர்ப்போம், அதன் மூலம் அந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து நிற்போம் என்று அவர் முடித்துக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...