பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தொடங்கக் கோரி DYFI அமைப்பினர் போராட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

DYFI கோவை மாவட்டச் செயலாளர் அர்ஜுன் கூறுகையில், "ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பின்பு, சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் 900 ரூபாய் பேக்கேஜை பி.எஸ்.என்.எல். 400 ரூபாய்க்கு வழங்க முடியும். ஆனால், இன்றுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டுமே பி.எஸ்.என்.எல். 4ஜி டவர் நிறுவப்பட்டுள்ளது. தற்போது டாடா நிறுவனத்திடம் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசால் செய்ய முடியாததை தனியார் செய்ய முடியும் என்று அரசு கருதினால், இந்த அரசு மக்களுக்கானதா அல்லது தனியாருக்கானதா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.



"தனியாருக்கு டெண்டர் விடுவதை தவிர்த்து, அரசே அதற்கான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வு காண வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாடு முழுவதும் DYFI சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்று அர்ஜுன் எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...