மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களை மேற்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...