கோவையில் அழகு கலை பயிற்சி முறையாக கற்றுத் தராததால் பணத்தை திரும்ப கேட்டு பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்

கோவையில் அழகு கலை பயிற்சியளிப்பதாக பணம் வாங்கி முறையாக கற்றுத் தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...