சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் 51,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் 2,680 ரூபாய் குறைந்துள்ளது.


Coimbatore: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போதைய விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக பலரும் கருதுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...