கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சர்ச்சை: 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்ற மாமன்ற சாதாரண கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், துணை மேயர் தன்னிச்சையாக முடிவெடுத்து 333 தீர்மானங்களை கொடுத்துள்ளதாகவும், இந்த தீர்மானங்களுக்காக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரபாகரன் மேலும் கூறுகையில், "கடந்த வாரம் 100 தீர்மானங்கள் கொடுத்தார்கள். தற்போது 250 தீர்மானங்கள் கொடுத்துள்ளார்கள். ஒரே நாளில் எப்படி அனைத்தையும் படிக்க முடியும்? திமுக மாமன்ற உறுப்பினர்கள் யாராவது இந்த தீர்மானங்களை படித்திருக்கிறார்களா என்று கேளுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.



மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரபாகரன், ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில், வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பின்னர், மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குறுக்கிட்டு, தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவுமாறும், இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...