தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடக்கம்

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கியது. வேடப்பட்டி மற்றும் பேரூர் கழகங்களில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூர் கழகம் மற்றும் பேரூர் கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.



இந்த முகாமினை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பேரூர் கழக செயலாளர்கள் இரா.தண்டபாணி மற்றும் ப.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள், திமுக கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இல்லம் தோறும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...