இஸ்லாம் குறித்து அறிய கிருஸ்தவ பாதிரியார்கள் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை

கோவையில் உள்ள நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்ற கிருஸ்தவ பாதிரியார்கள் சர்வ சமய நம்பிக்கைகளை அறிந்துகொள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர். இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்டு தெளிவடைந்தனர்.


கோவை: கோவை நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்று நாடெங்கும் பாதிரியார்களாக தேர்வாகியுள்ள கிருஸ்தவ பாதிரிமார்கள், சர்வ சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள கோவையில் உள்ள வணக்கஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று (26 ஜூலை 2024) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர்.



நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ஹுதா பள்ளிவாசல் இமாம் மௌலவி ரியாஸுதீன் அஸ்ஹரி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.



நிகழ்வில் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு தெளிவடைந்தனர். கேள்விகளுக்கு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பதிலளித்தார்கள்.



இந்நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகரச் செயலாளர் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அமீரே மகாமிகள் பீர் முஹம்மது, முஹம்மது பஷீர் ஆகியோரும் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.



மேலும் ஜமாஅத்தின் ஊழியர்கள், உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...