கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலம்

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர்.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களுக்கான வெள்ளி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் உள்ள பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.



முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு, நண்பர்களுடன் உரையாடியும் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...