கோவையில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய 5 பேர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தரணீதரன் (23) என்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் நேற்று (ஜூலை 27) ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அந்த 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். காயமடைந்த தரணீதரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...