உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்தனர். முறைகேடு புகார்களை அடுத்து நடந்த இந்த போராட்டத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும், சார்பதிவாளர் தாமோதரன் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் குடும்பத்தினரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சார்பதிவாளரை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட அதிகாரிகள், கணியூர் சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் உடுமலை அருகே கணியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...