அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,047 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாக இருக்கும் நிலையில், தற்போது நீர்மட்டம் 88.52 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 4,298 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ரா பாளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழவு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...