வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு கோவையிலிருந்து டெல்டா குவாட் குழு புறப்பட்டது

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 25 பேர் கொண்ட டெல்டா குவாட் குழு, நவீன மீட்பு உபகரணங்களுடன் வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டது. இந்த குழு 18 பேரிடர்களில் 3,500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் டெல்டா குவாட் குழு, வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிக்கு நவீன மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா குவாட் குழுவில் 25 வீரர்கள் உள்ளனர். கமாண்டர் ஈசன் தலைமையிலான இந்த குழு, கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டுள்ளது.



வயநாடு, சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மண்ணில் புதைந்திருப்பவர்களை துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவியை இந்த குழு எடுத்துச் செல்கிறது. சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் மண்ணில் புதைந்திருப்பவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும்.

மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் டியூப்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள இந்த டெல்டா குவாட் குழு, 3,500க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...