கோவையில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவருடன் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அணிகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...