நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள், பொதுமக்கள்

பொள்ளாச்சியில் நடுரோட்டில் பழுதடைந்த அரசு பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் தள்ளி இயக்கினர். அடிக்கடி பழுதாகும் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 51A எண் கொண்ட அரசு பேருந்து, திருவள்ளுவர் திடல் அருகே திடீரென பழுதடைந்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பல முறை முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை.



இதனால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் பேருந்தை பின்புறமாகவும், பின்னர் முன்புறமாகவும் தள்ளினர்.



இறுதியாக பேருந்து இயங்கத் தொடங்கியது.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, நெகமம், பெதப்பம்பட்டி, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...