கோவையில் கட்டுவிரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

கோவையில் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன் உயிரிழந்தார். சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களிலேயே உயிரிழப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்றபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

முரளிதரனுக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர். நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற முரளிதரன், மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பைக் கண்டார்.



பாம்பை லாவகமாக வாலைப் பிடித்து தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அது அவரைக் கடித்தது. பாம்பை பைக்குள் பிடித்து தூக்கிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



முரளிதரன் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றினார்.



எனினும், பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறை மற்றும் துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...