கோவை நேரு விளையாட்டு அரங்கில் இரண்டாவது நாளாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. 11 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஐந்து நாட்களில் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாம், இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வருகின்றனர். பங்கேற்பாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் சுமார் 1,000 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மொத்தம் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...