கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பராஷர் அக்ரோடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசியின் பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் இடையே "சேமித்த தானிய பூச்சிப்பொறி" வணிகமயமாக்கலுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்பொறி சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளைக் கண்டறிந்து பிடிக்கும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 2 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம், பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை வணிகமயமாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, "சேமித்த தானிய பூச்சிப்பொறி" என்ற புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்காக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பூச்சிப்பொறி, சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றைப் பிடிக்கும் ஒரு நவீன சாதனமாகும். இதனை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் முனைவர் எஸ். மோகன் உருவாக்கியுள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் முனைவர். தமிழ்வேந்தனும், பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் சார்பில் இயக்குநர் பூர்ணேந்திரசேகர் பாண்டேவும் கையெழுத்திட்டனர்.

இந்த முக்கிய நிகழ்வில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் சோமசுந்தரம், வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரவிராஜ், உணவுப் பதப்படுத்துதல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பூச்சியியல் பேராசிரியர் முனைவர் மோகன் ஆகியோர் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதோடு, தானிய சேமிப்பு முறைகளை மேம்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...