கோவையில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள்: 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. 6 முதல் 18 வயது வரையிலான பிரிவுகளில் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகளை நடத்தின.

இந்த போட்டிகள் 6 வயது முதல் 8 வயது வரை, 8 வயது முதல் 12 வயது வரை, 12 வயது முதல் 14 வயது வரை மற்றும் 14 வயது முதல் 18 வயது வரை என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. ஒத்தகம்பு, இரட்டை கம்பு, வேல்கம்பு, வாள், சுருள்வாள் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளின் தொடக்க விழாவில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக உயர்நீதி மன்ற மதுரை கிளை சட்டப்பிரிவு துணை ஆணையர் அறிவழகன், சேலம் உளவுத்துறை துணை ஆணையர் சிந்துஜா ஆகியோர் கலந்துக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம் மணி, தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் நிறுவனர் ஆசான் குமார், கேரளா மாமாங்கம் களரி கேந்ரா நிறுவனர் ஆசான் சுலைம், தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மதுசூதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சிலம்பம் விளையாட்டு சங்க ஊட்டி தலைவர் ஆல்பட் சிறப்புரை வழங்கினார்.

இந்த போட்டிகளுக்கு கிருஷ்ணன், கோபால், ரங்கசாமி, ராமபாலன், ஆனந்தகுமார், முத்துபாண்டி, ரேமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கோவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிலம்ப பயிற்சி மையங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...