பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டம்: தனியார்மயக் கொள்கையை கைவிட வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையால் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று எச்சரித்து, அக்கொள்கையை கைவிட வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதாகவும், அதனை ஒன்பதாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை சிறப்பு மாநில மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழக அரசின் தவறான தனியார்மயக் கொள்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் சுங்க வசூலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 3,500 சாலைப் பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.



"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று அம்சராஜ் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அம்சராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...