பொள்ளாச்சி காவல் நிலையத்தில் மதுபோதையில் தகராறு செய்த நபர் கைது

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மதுபோதையில் மாணவிகளை அச்சுறுத்திய நபர், காவல் நிலையத்தில் DSP முன்னிலையில் தகராறு செய்து கைது செய்யப்பட்டார்.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், அவ்வழியாக வரும் மாணவிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) ஜெய்ச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் இருந்தனர்.



போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், சட்டை இல்லாமல் "என்னை அடிங்க... அடிங்க.... என்னை ஒன்றும் செய்ய முடியாது" என ரகளையில் ஈடுபட்டு, கையில் கிடைத்த பொருளை தூக்கி வீசி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமகனின் செயலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார், ஒரு வழியாக அவரை காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், "என்னதான் மதுபோதையில் இருந்தாலும் காவல் நிலையத்துக்குள்ளேயே இப்படியொரு அலப்பரியா..." என முகம் சுழித்து சென்றனர்.

விசாரணையில் இந்த நபர் நந்தனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...