உடுமலைப் பகுதியில் பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் லட்சார்ச்சனை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் உள்ள பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டியும் இந்த லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

லட்சார்ச்சனையில் இருபதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர். ரோஜா, துளசி, சம்பங்கி பூக்கள் மூலம் வேத மந்திரங்களுடன் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூமி லட்சுமி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முதல் நாள் லட்சார்ச்சனை, உபசாரம், சாற்றுமுறை நிறைவு பெற்ற பின் அம்மனுக்கு சிறப்பு மலர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முக்கிய நிகழ்வாக வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...