உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.3.28 லட்சம் வசூல்

உடுமலை அருகே திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.3,28,403 வசூலானது. கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.



இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் வருகை தருகின்றனர்.



கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 12 பொது உண்டியல்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் ரூ.2,99,360 மற்றும் நாணயங்கள் ரூ.27,621 ஆக மொத்தம் ரூ.3,26,981 வசூலானது. கோசாலை உண்டியலில் இருந்து ரூ.1,422 வசூலானது. ஆக மொத்தம் அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து ரூ.3,28,403 வசூலானது.



இந்த உண்டியல் எண்ணிக்கை நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, உறுப்பினர்கள் ராஜபாலன், ராதாகிருஷ்ணன், பானுரேகா, தேவராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடைசியாக கடந்த ஜூன் 12 அன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...