வாயில் கருப்பு துணி கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்,

வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளையும், தமிழகத்தையும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இன்று நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள், கூட்டமைப்பு சங்கங்களும், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். 

தேசிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அன்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும் புறநகர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இவை சீராக ஒரே வழி மத்திய அரசு தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.

காவிரியை சுத்தப்படுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது எனவும் தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியவருக்கு மூன்று மணி நேரத்தில் ஜாமின் கிடைக்கிறது. சில ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் பெற்ற விவசாயிகளின் கழுத்து வங்கி நிர்வாகத்தால் நெரிக்கப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தங்களது வாயில் கருப்புத் துணி கட்டி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...