வயநாடு நிலச்சரிவு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி - கேரள முதல்வரிடம் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி. கோவை தொண்டாமுத்தூர் MLA எஸ்.பி.வேலுமணி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்கினார்.


வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...