கோவை வேளாண் பல்கலையில் மரபணு குளோனிங் பயிற்சி: இந்தியா, மலேசியா, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் பயிற்சி நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்தியா, மலேசியா, இங்கிலாந்தில் இருந்து 23 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் நான்கு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 6 முதல் 9, 2024 வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் தலைப்பு "மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு ஆகியவற்றில் நேரடி பயிற்சி" என்பதாகும். இந்தியா, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 23 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இதில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் N.செந்தில், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தாவர உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் இ.கோகிலாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடக்க உரையில் பேசிய முனைவர் N.செந்தில், அனைத்து மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்கும் ஜீன் குளோனிங் ஒரு முக்கிய நுட்பமாக இருப்பதை வலியுறுத்தினார். மேலும், பயிற்சித் திட்டம் பற்றிய மேலோட்டமான பார்வையையும், மரபணு குளோனிங்கின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் பேசுகையில், திறமையான மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதில் இந்த வகையான மரபணு குளோனிங் பயிற்சியின் பங்கு குறித்து விளக்கினார். மேலும், மரபணு குளோனிங் மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னேற்றத்திற்கான ஜீனோமிக்ஸ் ஆகியவற்றில் நடைமுறை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடக்க விழாவில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுகமும் நடைபெற்றது. நிறைவாக, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் எல்.அருள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...