ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம். வார்டு உறுப்பினர் வீட்டில் சாதி ரீதியாக அவதூறு பேசியதாக புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் அருகே உள்ள செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குட்கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஊராட்சியின் பெண் தலைவராக சரஸ்வதி பதவி வகிக்கிறார். துணை தலைவராக பாஜகவை சேர்ந்த பாலராமநாதன் உள்ளார். மேலும் 8 உறுப்பினர்கள் காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களாக உள்ளனர். துணைத்தலைவர் பாலராமநாதனுடன் லட்சுமி (காங்கிரஸ்), முத்து பிரபாவதி, தீபவதி, சரஸ்வதி (திமுக) ஆகியோர் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சியில் சுமார் ரூ.90 லட்சத்திற்கு மேல் நிதி இருப்பதாக தெரிகிறது. குடிநீர் பற்றாக்குறை அதிகரித்ததால் ஆழ்துளை கிணறு அமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்த வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் துணை தலைவர் உட்பட 5 பேர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

இதனால் நேற்று பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து தலைவரிடம் நேரில் சென்று முறையிட்டனர். தலைவர், 5 பேர் கையெழுத்திட மறுப்பதால் கடந்த 2 மாதங்களாக ஊராட்சியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கூட மாத சம்பளம் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வார்டு உறுப்பினர் தீபா அவர்களின் வீட்டிற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் சென்று கையெழுத்திடுமாறு கோரினர். அப்போது தீபா, அவரது கணவர் சின்னசாமி, மகன் பரத்ராஜ் ஆகியோர் ஆதிதிராவிட மக்களை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை அடைந்த பொதுமக்கள் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊதியூர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக சாமியானா அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் கேட்டு போராடி வரும் பொதுமக்களுக்கு பதிலளிக்க குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், திமுக நிர்வாகிகள் என்றால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். செய்தி துறை அமைச்சர் தொகுதியில் திமுக நிர்வாகிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...