உக்கடம் புதிய மேம்பாலம் திறப்பு: நிறைவடையாத பணிகளால் போக்குவரத்து நெரிசல்

கோவையில் உக்கடம் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறைவடையாத பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.



Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், மேம்பாலப் பணிகள் சில இடங்களில் இன்னும் நிறைவடையாததால், உக்கடம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கேரளா, பழனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம், செல்வபுரம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், கேரளா மற்றும் பொள்ளாச்சி வழியாக வரும் வாகனங்கள் ராமநாதபுரம் செல்ல வழி இல்லாததால், மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு இறங்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பில் குவிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. முன்பு மேம்பாலம் இல்லாதபோது 30 நிமிடங்களில் கடக்கும் பாதையை, தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திறப்பு விழாவின் போது, புதிய மேம்பாலத்தால் ஏழு நிமிடங்களில் சாலையைக் கடந்துவிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...