மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை: கோவையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மதிமுக சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



அதன் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட மதிமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மதிமுக மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...