கோவை பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா: மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கொடியேற்றினார்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கலந்து கொண்டு கொடியேற்றினார். வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்புரையும் ஆற்றினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவருமான ஜி வி நவீன் குமார், கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, எஸ் ஆர் பி மில், பெரியார் நகர், வலியாம்பாளையம், லட்சுமி நகர், ரத்தினகிரி நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் நவீன் குமார் பங்கேற்றார்.



கோவை வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விளாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், சாமுவேல் தாஸ், ஜெயப்பிரகாஷ், முருகேசன், முருகானந்தம், மருதாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், முரளி கிருஷ்ணன், சுரேஷ் கார்த்திக், அம்பாள் பிரகாஷ், கார்த்திக், பிரசாந்த், சுந்தரசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர் காங்கிரஸ் விஜய், ராமலிங்கம், மணி, வலியாம்பாளையம் பாலு, கணேசன் மையான், பாபு, பட்டிலிங்கம், ஜெயான், பசுபதி, லீபன் உள்ளிட்ட பலரும் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...