கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது, கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்- ஏபி முருகானந்தம்

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் கழிப்பிட வசதி இல்லாமை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் இருப்பிட மருத்துவரிடம் சென்று விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிபிஐ விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கோவை அரசு மருத்துவமனையில் 200 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் வேலை செய்யவில்லை என்றும் முருகானந்தம் தெரிவித்தார். மேலும், கழிப்பிட வசதி இல்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இரத்தக்கறை படிந்த துணிகளை எடுக்க கூட ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சுகாதார அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முருகானந்தம், சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...