18 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



Coimbatore: கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் திருநெறிய தீந்தழிம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழா கடந்த 9ம் தேதி காலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் அமைத்து தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. 17ம் தேதி ஸ்ரீ சித்தம்மாள் திருக்கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டன. அதே நாள் மாலை ஊர் முழுவதிலும் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைபாலிகைகள் அழைத்து வந்தனர். மாலையில் ஓயிலாட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



18ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண்ணெடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு ஆகியவை அடங்கும். அன்று மாலை முதற்கால வேள்வி, இரவு விமான கலசம் நிறுவுதல், மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

19ம் தேதி மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு, திருக்கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கெளமார மரபு தண்டபாணி சுவாமிகள் வழி வழி சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கோவில் கோபுரத்திற்கு திருக்குடங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. பின்னர் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மாரியம்மனுக்கு அலங்கார மற்றும் அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் அப்பநாயக்கன்பாளையம், துடியலூர், பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...