பாலக்காடு கோழிப்பாறை அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காடு கோழிப்பாறையில் உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.



Coimbatore: பாலக்காடு அருகே உள்ள கோழிப்பாறையில் அமைந்துள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதாக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

இந்த முகாமில் பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நீரிழிவு பாத நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், பவுத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கும் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.



அஹல்யா நீரிழிவு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் முதன்மை மருத்துவர்கள் பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த தகவல்களை வெளியிட்டனர்.

அறுவை சிகிச்சைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுரேஷ் பாபு கூறினார். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...