உடுமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணபதி பாளையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதி பாளையத்தில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இந்த செய்தி அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணபதி பாளையம் கிராமத்தில் பல விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டச்சாலைகளில் வசித்து வருகின்றனர்.



இப்பகுதியில் பிராய்லர் கோழிப் பண்ணைகளும் அமைந்துள்ளன. இந்த பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஒரு தனியார் விவசாய பண்ணையில் உள்ள ஆடு, மாடு மற்றும் கோழிகளை அடைக்கும் கொட்டகையில் இருந்து கோழிகள் மர்மமான முறையில் காணாமல் போயின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் சிறுத்தை போன்ற ஒரு மர்ம விலங்கு கோழிகளை குறிவைத்து பாய்ந்து, அவற்றைக் கவ்விச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இந்த வீடியோ பதிவுகளை வனத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.



இந்த விலங்கு உண்மையில் சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது, இந்த மர்ம விலங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...