பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 64 பள்ளி மாணவர்களுக்கு டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரக நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொள்ளாச்சி சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பங்கேற்றனர்.

பொது மருத்துவ துறை மற்றும் டயாலிசிஸ் பிரிவு தலைவர் மருத்துவர் வனஜா, மாணவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பது குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.



சிறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்களாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை மருத்துவர் வனஜா சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் கௌரி மற்றும் டயாலிசிஸ் டெக்னீசியன் அனுசுயா ஆகியோரும் உடனிருந்தனர்.

பயிற்சியின் முடிவில், பள்ளி மாணவர்கள் இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...