கோவை குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு: அரசு உதவி கோரி அமைச்சர்களை சந்தித்த பெற்றோர்

கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு தேவைப்படுவதால், அரசின் உதவியை நாடி அமைச்சர்களை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதால், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து முடிந்தவரை உதவிகள் கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் R.முத்தரசன் அவர்களை கடந்த 21.08.2024 அன்று நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, முத்தரசன் சுகாதார அமைச்சரை 24.08.2024 அன்று நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர், குழந்தையை அழைத்து வந்து முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



இதே போல், இன்று கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் குழந்தையின் பெற்றோர் நேரில் சந்தித்துள்ளனர். மாவட்டப் பொறுப்பு அமைச்சர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் உதவியுடன் குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...